உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., ஆய்வு

நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., ஆய்வு

நாமக்கல், நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள தனிப்பிரிவு, குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உள்ளிட்டவற்றில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்ட வழக்குகள், குற்ற வழக்குகள், மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும், போலீசாரின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களையும், மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் குறித்த விபரங்களையும் ஐ.ஜி., கேட்டறிந்தார். முன்னதாக போலீசாரின் மரியாதையை ஐ.ஜி., செந்தில்குமார் ஏற்றுக் கொண்டார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., விமலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ