உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாவை பொறியியல் கல்லுாரிகளில் அனைத்து மன்றங்களின் துவக்க விழா

பாவை பொறியியல் கல்லுாரிகளில் அனைத்து மன்றங்களின் துவக்க விழா

ராசிபுரம்ராசிபுரம் அருகே பாய்ச்சலில் உள்ள, பாவை பொறியியல் கல்லுாரிகளில் அனைத்து மன்றங்களின் துவக்கவிழா மற்றும் மாணவ தலைவர்களை பொறுப்பேற்க செய்யும் விழா நடந்தது.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்து பேசினார். சிறப்பாளராக பங்கேற்ற நாமக்கல் மாவட்ட துணை மாவட்ட ஆட்சியர் அங்கித்குமார் ஜெயின் அனைத்து மன்றங்களையும் தொடங்கி வைத்தார். இறுதியாண்டு மாணவன் அஜ்மல் தாஷீன் வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்து விளக்கேற்றி பேசினார். அதன் பின், அங்கித் குமார் ஜெயின் பேசுகையில், '' மாணவ மன்ற அமைப்பின் தலைமை, செயலர், பொருளர் என்று பல்வேறு பொறுப்புகளில் செயல்பட போகிற நீங்கள் உங்களின் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு அறிவினை வழங்குவது மட்டுமின்றி, மேலாண்மை திறன், சமூக திறன், முடிவெடுக்கும் திறன்களை வளர்க்கும்,” என்றார்.இறுதியாண்டு மாணவி சுவாதினி ஸ்ரீ நன்றி கூறினார். பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி, இயக்குனர் (ஆராய்ச்சி) கிருஷ்ணமூர்த்தி, அனைத்து கல்லுாரி முதல்வர்கள், முதன்மையர்கள், பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளர் கமலா கிருஷ்ணமூர்த்தி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை