மேலும் செய்திகள்
ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
17-Sep-2024
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, தேவராயபுரம் பஞ்,, குட்டையை துார்வாரி பனைவிதை நடவு செய்யும் பணி நடந்தது.எருமப்பட்டி யூனியன், தேவராயபுரம் பஞ்.ல், ஸ்வச்சதா ஹி சேவா திட்டத்தின் கீழ், தேவராயபுரம் குட்டையை துார்வாரி பனைவிதை நடவு செய்யும் பணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் கல்வி நிறுவன தலைவர் மஹிந்தர்மணி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில், பஞ், தலைவர் ரேணுகாதேவி, அசோக் லேலாண்டு மேலாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனைமர விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில், ஞானபிரகாசம், பிரன்ஸ் ஏபினேசர், வடமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
17-Sep-2024