உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 203 பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்

203 பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்

பள்ளிப்பாளையம், எலந்தகுட்டை அடுத்த ஈ.காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார்.விழாவில், அமைச்சர் மதிவேந்தன், பாதரை மற்றும் வீரப்பம்பாளையம் பகுதிகளில் வசிக்கும், 203 பயனாளிகளுக்கு, 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் ஆணை, புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''குமாரபாளையம் தாலுகா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களது கனவை நனவாக்கும் வகையில், 147 பேருக்கு, 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. நான்கரை ஆண்டுகளில், நாமக்கல் மாவட்டத்தில், 30,000-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அங்கித் குமார் ஜெயின், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை