கிசான் கால் சென்டர் மாணவியர் விழிப்புணர்வு
ராசிபுரம்: புதுச்சத்திரம் ஒன்றியத்தில், தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர், தங்களது கிராமப்புற அனுபவ பயிற்சியில், விவசாயிகளுக்கு வெவ்வேறு பயிற்சி பற்றிய முகாம்கள் நடத்தி வருகின்றனர். நேற்று கிசான் கால் சென்டர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிசான் கால் சென்டர், 2004ம் ஆண்டு வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டது. இது காலை, 9:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கி வருகின்றனர். இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது விதைப்பு, அறுவடை, உரம் இடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம், எனக்கூறினர்.