| ADDED : ஜூலை 31, 2024 07:14 AM
சேந்தமங்கலம் : 'வல்வில் ஓரி' விழாவையொட்டி, கொல்லிமலைக்கு செல்லும் பாதையை சுத்தம் செய்யும் பணியை, கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் ஆண்டுதோறும், ஆக., 2, 3ல் (ஆடி, 17, 18) ஆகிய இரண்டு நாட்கள், 'வல்வில் ஓரி' விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், அரசு சார்பில் மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. வரும் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள், 'வில்வில் ஓரி' விழா கோலாகலமாக நடப்பதால், மலைக்கு செல்லும் மக்கள், 'நெகிழி' (பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், துணி பைகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில், மலைக்கு செல்லும் பாதையை துாய்மைப்படுத்தும் பணியை, கலெக்டர் உமா துவக்கி வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார். ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.