உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கர்ப்பிணிகளுக்கு 3,866 யூனிட் ரத்தம் வழங்கியவர்களுக்கு பாராட்டு

கர்ப்பிணிகளுக்கு 3,866 யூனிட் ரத்தம் வழங்கியவர்களுக்கு பாராட்டு

நாமக்கல்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி, கொடையாளர்க-ளுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், 36 ரத்த கொடையாளர்க-ளுக்கு கலெக்டர் உமா கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் அரசு நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்-துவமனை, ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதி-களில், 3 அரசு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 4,912 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்-பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 101 ரத்ததான முகாம்கள் மூலம், 8,054 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகள் பயன்-பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு, 3,866 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் அருளரசு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலு-வலர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை