உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதை இல்லாமல் சாதனை படைப்போம் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

போதை இல்லாமல் சாதனை படைப்போம் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

போதை இல்லாமல் சாதனை படைப்போம்மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வுநாமக்கல், அக். 10-இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுமம், தமிழ்நாடு கிளை மற்றும் இளம் பருவ சுகாதார நிறுவனம் சார்பில், 'போதை இல்லாமல் சாதனை படைப்போம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்தது. இந்திய குழந்தைகள் நல மருத்துவ குழும தலைவர் பாலசங்கர் தலைமை வகித்தார். இளம் பருவ சுகாதார நிறுவன தலைவர் இஸ்மாயில், செயலாளர் ஜெயஸ்ரீ அஸ்வத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குழுமத்தின் நாமக்கல் ஒருங்கிணைப்பாளர் இளமுருகு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட, 200 மாணவர்களுக்கு மட்டும், போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.போதைப்பொருள் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும்; அவர்கள் பெற்றோர்களுக்கு எப்படி தகவல் தெரிவிப்பது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. மாறிவரும் சமூக சூழலில், வளரிளம் பருவத்து மாணவ, மாணவியரிடையே காணப்படும் தேவையற்ற தீய பழக்கங்களை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை