உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெறிநாய்களால் ஆடுகள் இறப்பு கால்நடை வளர்ப்போர் அச்சம்

வெறிநாய்களால் ஆடுகள் இறப்பு கால்நடை வளர்ப்போர் அச்சம்

பள்ளிப்பாளையம்: வெப்படை அருகே, லட்சமிபாளையம் பகுதி யில் வெறிநாய் கடித்து தொடர்ந்து ஆடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர். பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த லட்சுமிபா-ளையம் பகுதியில் ஏராளமானோர் ஆடுகளை வளர்த்து வருகின்-றனர். இப்பகுதியில் சில நாட்களாக வெறிநாய் நடமாட்டம் அதி-கரித்துள்ளது. இதனால், கடந்த, 6ல் வெறிநாய் கடித்து, இரண்டு ஆடுகள் இறந்தன. நேற்று முன்தினம், வெறிநாய் கடித்து, மூன்று ஆடுகள் இறந்தன. வெறிநாய் கடித்து தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவதால், கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்-ளனர். மேலும், குழந்தைகள், சிறுவர்கள் சாலையில் சென்றால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:லட்சுமிபாளையம் பகுதி யில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்-ளது. வெறிநாய் கடியால் தொடர்ச்சியாக ஆடுகள் இறந்து, வாழ்-வாதாரத்தை பாதிக்க செய்கிறது. அதனால், வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்ட-ரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ