உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பயணப்படியுடன் கால்நடை வளர்க்க திறன் வளர்ப்பு பயிற்சி

பயணப்படியுடன் கால்நடை வளர்க்க திறன் வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்: 'சுய தொழில் தொடங்க பயணப்படியுடன் கால்நடை வளர்ப்பு பற்றிய திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது' என, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கால்நடை வளர்ப்பில் பல்-வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. ஆக., மாத இறுதி வாரத்-திலிருந்து, 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்சியாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி, பால் உற்பத்தி செய்யும் தொழில், செம்மறி-யாடு வளர்ப்பு பயிற்சி, ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி, நாட்-டுக்கோழி வளர்ப்பு பயிற்சி என, ஐந்து வகையான பயிற்சிகள், வெவ்வேறு நாட்களில் நடக்கவுள்ளது. ஒரு மாதத்திற்கு, 25 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, சென்னையிலுள்ள தமிழ்-நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதி உதவியுடன் வெற்றி நிச்-சயம் என்ற திட்டத்தில் வழங்கப்படுகிறது.வேலையில்லாத இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது. 18 வயது முதல், 35 வயதுடைய ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பட்ட படிப்பு, பட்டைய படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பள்ளி படிப்பை முடித்தவர்கள் விண்-ணப்பிக்கலாம்.இப்பயிற்சி, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நடைபெறும். தினமும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கும் போதும் மற்றும் பயிற்சி முடியும் போதும் வருகைபதிவு, பயோமெட்ரிக் சாதனம் மூலம் பதிவு செய்யப்படும். இவ்வாறு வருகைப்பதிவு எடுக்கப்பட்டு, 25 நாட்கள் முடிந்தவுடன் பயணப்படியாக, 6,000 ரூபாய் பய-னாளிகளுக்கு வழங்கப்படும். விடுதியில் தங்கி பயிற்சி பெற்றால், பயிற்சி முடிந்தவுடன் ஒரு நாளைக்கு விடுதி செலவாக, 250 ரூபாய் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், http://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1481 என்ற இணை-யதளத்தில் இம்மாத இறுதிவாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 04286-266345, 266650, 9943008802 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி