பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி கழிவறை
பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி கழிவறைராசிபுரம், அக். 30-ராசிபுரம் அடுத்த வடுகம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள், பெற்றோர் பயன்படுத்த இதே கட்டடத்தில் பொதுக்கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை பயன்படுத்துவதே இல்லை. பூட்டியே வைத்துள்ளனர். குழந்தைகள் அருகில் உள்ள வெட்ட வெளியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். சுற்றுப்புறத்தில் புதர் மண்டி காணப்படுவதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, கழிவறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.