உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

ப.வேலுார், ப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மணல் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், காவிரி ஆற்று மணல் இருந்தது. ஆனால், மணலுக்கு உரிய ஆவணம் இல்லை. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவிரி ஆற்றில் மணலை சட்ட விரோதமாக திருடி விற்பனைக்கு, நாமக்கலுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.இதையடுத்து, மணல் லாரி டிரைவர் கேரளா மாநிலம் பாலக்காடு அருகே சித்துாரை சேர்ந்த மது, 45, கைது செய்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணல் லாரி உரிமையாளரை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை