உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், நான்கு மாதங்களுக்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியதொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கி வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று புதுச்சத்திரம் இந்தியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மா.கம்யூ., முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி, விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ