உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,க்கு மக்கள் உற்சாக வரவேற்பு

மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,க்கு மக்கள் உற்சாக வரவேற்பு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், எஸ்.ஐ.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.கடந்த, 27 ம்தேதி, கேரள மாநிலம், திருச்சூரில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு கன்டெய்னர் லாரி மூலம் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று தப்ப முயன்றது. அந்த கும்பலை, நாமக்கல் மாவட்டம், வெப்-படை பகுதியில் போலீசார் பிடித்தனர். இதில் கொள்ளையர்கள் போலீசாரை தாக்கியதில், குமாரபா-ளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,ரஞ்-சித்குமார் ஆகியோர் படுகாயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்-களை டி.ஜி.பி.,சங்கர் ஜிவால், கோவை ஐ.ஜி.,செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி.,உமா, நாமக்கல் எஸ்.பி.,ராஜேஸ்கண்ணன், நாமக்கல் கலெக்டர் உமா உள்ளிட்டோர் நேரில் சந்திந்து ஆறுதல் கூறி, பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.இந்நிலையில், சிகிச்சை முடிந்து மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்றுமுன்தினம் வந்த எஸ்.ஐ.,ரஞ்சித்குமாருக்கு மல்லசமுத்திரம் ஊர்மக்கள் சார்பாக மாலை, சால்வை அணி-வித்து, இனிப்பு வழங்கப்பட்டது. பின் பட்டாசு வெடித்து வாழ்த்-துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை