உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பஞ்சாயத்து செயலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி கஸ்பா தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள்முருகன், 57; இவர், பெருமாகவுண்டம்பாளையம் பஞ்.,ல் செயலராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நாட்களாக பஞ்., அலுவலகம் முன் உள்ள சாக்கடையை துார்வாரி மண்ணை சாலையோரம் கொட்டியுள்ளனர்.இந்நிலையில், நேற்று அவ்வழியாக குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வம், 50, அலுவலக பணியில் இருந்த அருள்முருகனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அருள்முருகன் கொடுத்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து, ராசிபுரம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ