ஆணைவாரி நீர் வீழ்ச்சி தண்ணீர் வரத்து அதிகரிப்பு வனத்துறை தடை விதிப்பு
ஆத்துார்: குளிப்பதற்கு அனுமதி வழங்கிய ஒரு மணி நேரத்தில், ஆணை-வாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், வனத்துறை-யினர் தடை விதித்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில், முட்டல் கிராமம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி, வனத்து-றையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கல்வராயன்மலை பகுதியில் கடந்த, 7ம் தேதி இரவு அதிகளவில் மழை பெய்தது. மூன்று நாட்களாக, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரிகளுக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிக-ரித்துள்ளது.இரண்டு நாட்களாக, நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு, வனத்துறை-யினர் தடை விதித்தனர். இந்நிலையில், நேற்று காலை குளிப்ப-தற்கு அனுமதி வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்கு மீண்டும் வனத்துறையினர் தடை விதித்தனர்.