மேலும் செய்திகள்
மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்
28-Jun-2025
நாமக்கல்:நாமக்கல் அருகே, கதிராநல்லுாரை சேர்ந்தவர் காளியப்பன், 29; கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, மே, 3-ல் கண்ணுார்பட்டியில் ஒரு வீட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். இந்நிலையில், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வீல் சேரில் குடும்பத்துடன் வந்த காளியப்பன், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது புதுச்சத்திரம் போலீசில் புகாரளித்தேன். ஆனால், போலீசார் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என, தெரிவித்திருந்தார்.
28-Jun-2025