உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோடு நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மாஸ் கிளீனிங்

திருச்செங்கோடு நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மாஸ் கிளீனிங்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு பணியாளர்கள், பரமத்தி வேலுார் சாலையில் உள்ள சாக்கடை அடைப்பை, 'மாஸ் கிளீனிங்' முறையில் சுத்தப்படுத்தினர்.திருச்செங்கோடு நகராட்சியில், பரமத்தி வேலுார் ரோடு கார்னரில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, சிறுமழை பெய்தாலும் கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகார்படி, நகராட்சி சேர்மேன் நளினி சுரேஷ்பாபு, கமிஷனர் சேகர் ஆகியோர், பார்வையிட்டு மாஸ் கிளீனிங் அடிப்படையில் சாக்கடை அடைப்பு முழுவதையும் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நகராட்சி துப்புரவு பணியாளர்கள், 10க்கும் மேற்பட்டோர் சாக்கடை அடைப்பை சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை