உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மகளிர் கல்லுாரியில் நுண்ணுயிரியல் தின விழா

மகளிர் கல்லுாரியில் நுண்ணுயிரியல் தின விழா

நாமக்கல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், நுண்ணுயிரியல் துறை சார்பில், நுண்ணுயிரியல் மன்ற துவக்க விழா மற்றும் சர்வதேச நுண்ணுயிரியல் தின விழா கொண்டாடப்பட்டது. மேச்சேரியில் உள்ள காவேரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் செல்வகுமார், 'மனித ஆரோக்கிய சிக்கல்களில் நுண்ணுயிரிகளின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார். விழாவில், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவியர்களுக்கும் முக ஓவியம், ரங்கோலி, கைவினை பொருள்கள் உருவாக்குதல், ஓவியம் வரைதல், வினாடி-வினா ஆகிய போட்டிகள் பஞ்ச பூதங்களில் நுண்ணுயிரிகளின் பங்கு என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் அலெக்சாண்டர், துறை தலைவர் முத்துமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை