மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்து வார்டு எண்.1, போதமலை சாலை பகுதியில் எம்.பி., நிதியில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் கட்டப்பட்டது. இதை எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளதால், பட்டணம் பேரூராட்சி சுற்றியுள்ள எட்டு கிராம விவசாயிகள் பயனடைவர் எனஎம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்தார்.தொடர்ந்து ராசிபுரம், குருசாமிபாளையம், மொஞ்சனுார், ஓ.-சௌதாபுரம், வெள்ளப்பிள்ளையார் கோவில், ராசாப்பாளையம், வெண்ணந்துார், ஆட்டையாம்பட்டி வழியாக இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் வழித்தடமானது ஓ.செளதாபுரம் முதல் ராசாப்பாளையம் வரையிலான நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தை எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், ராசிபுரம், ஆர்.புதுப்பளையம், கல்லாங்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் வழித்தடமானது, ஆர்.புதுப்பாளையம் முதல் சானார்பாளையம் புதுார் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி சேர்மன் கவிதா சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் போதம்மாள், துணைத்தலைவர் பொன்.நல்லதம்பி, டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025
05-Oct-2025