உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 95 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.75.55 லட்சத்தில் சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு: அமைச்சர் வழங்கல்

95 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.75.55 லட்சத்தில் சாம்பியன்ஸ் கிட் தொகுப்பு: அமைச்சர் வழங்கல்

நாமக்கல், டிச. 8-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும், 95 வீரர், வீராங்கனைகளுக்கு, 'சாம்பியன்ஸ் கிட்' தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும், வீரர், வீராங்கனைகளுக்கு, 75.55 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன கைகடிகாரம், பேக், முதலுதவி ஐஸ் பேக், கைக்குட்டை, துண்டு, வாட்டர் பாட்டில், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய, 'சாம்பியன்ஸ் கிட்' வழங்கினார்.மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2022-23ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்று, கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறந்து விளங்கிய, 30 பேருக்கு, பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.அதேபோல், 'தேன்சிட்டு', 'ஊஞ்சல்' இதழ் சிறார் படைப்பாளர்களுக்கு, 2023-24ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 31 பேருக்கும், 2023-24ம் ஆண்டிற்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி திட்டம் மற்றும் மாணவர்களுக்கான மாதிரி வடிவமைப்பு முகாம்களில் வெற்றி பெற்ற, இரண்டு அணிகளுக்கும் பரிசு, சான்றிதழ் மற்றும் விருதும் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட நிர்வாகம், திருச்செங்கோடு தாலுகா சார்பில் தயாரிக்கப்பட்ட, 'உயிர்க்கவசம்' என்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார். துணை மேயர் பூபதி, ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவரம்பன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கோகிலா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை