உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் நகை, பணம் இல்லாததால் சொம்பு திருட்டு

கோவில் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் நகை, பணம் இல்லாததால் சொம்பு திருட்டு

கோவில் பீரோவை உடைத்த மர்ம நபர்கள்நகை, பணம் இல்லாததால் சொம்பு திருட்டு பள்ளிப்பாளையம், அக். 5-வெள்ளிக்குட்டை வீரமாத்தி கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால், 'செம்பு' சொம்பை திருடிச் சென்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, வெள்ளிக்குட்டை காட்டுப்பகுதியில் வீரமாத்தி கோவில் உள்ளது. இக்கோவில் பூட்டை உடைத்து, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த பீரோவில் நகை, பணம் இருக்கும் என, கருதிய மர்ம நபர்கள், பீரோ கதவை உடைத்துள்ளனர். ஆனால், அதில் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும், 'செம்பு' சொம்பை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் கதவு, பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அவர்கள், வெப்படை போலீசில் அளித்த புகார்படி, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ