மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்துார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேச பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்த வேண்டும். சம்பளத்தை, 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.