உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஆக்கிரமிப்பால் அவதி

நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஆக்கிரமிப்பால் அவதி

நாமக்கல் : நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், துறையூர், திருச்சி, மோகனுார், கரூர், ஈரோடு, சேலம் என பல்வேறு பகுதிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட அரசு, தனியார், 'மப்சல்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்துவதற்காக பஸ் ஸ்டாண்டில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் அமர்வதற்கு இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், அந்த நிழற்கூரையில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாத வகையில் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கூடுதல் இருக்கைகள் அமைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை