நாமக்கல்லில் பீக் ஹவர்ஸ் நேரத்தில் வரும் வாகனங்களால் கடும் பாதிப்பு
நாமக்கல்லில் பீக் ஹவர்ஸ் நேரத்தில்வரும் வாகனங்களால் கடும் பாதிப்புநாமக்கல், செப். 28-நாமக்கல் நகரில், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் உள்ளே நுழையும் கனரக வாகனங்களால், போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. நாமக்கல் கடைவீதி, பூங்கா சாலை, பரமத்தி சாலை, சேலம் சாலை, திருச்சி மற்றும் மோகனுார் சாலைகளில், வாகனங்கள் போக்குவரத்தும், மக்கள் கூட்டமும் அதிகரித்து காணப்படும். அதனால், நகருக்குள் காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சேந்தமங்கலம் சாலையில் இருந்து மஜீத் தெரு-குட்டை தெரு பிரிவு சாலை பகுதியில் விதிமுறைகளை மீறி, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.அதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர முடியத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடங்களை கண்காணித்து, விதிமுறைகளை மீறி நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.