உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் நகர மக்களின் வசதிக்காகபூங்கா அமைக்க திட்டம்

நாமக்கல் நகர மக்களின் வசதிக்காகபூங்கா அமைக்க திட்டம்

நாமக்கல்: 'தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் நகர மக்களின் பொழுதுபோக்குக்காக, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்படும்' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை பிரதான சாலையில், செலம்ப கவுண்டர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்குள் அமைந்துள்ள ஒரு பழைய ஓட்டுக்கட்டிடத்தில் ஒரு படிப்பகம் இயங்கி வந்தது. தற்போது, இக்கட்டிடம் பழுதடைந்துள்ளதால் படிக்கப்பம் இங்கு செயல்படுவதில்லை.பூங்காவும் பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும், செலம்ப கவுண்டர் பூங்கா அருகில் அமைந்துள்ள தினசரி சந்தை வளாகத்தில் உள்ள, 91 கடைகள் பயன்படாத நிலையில் உள்ளன. இக்கடைகள் மிகவும் பழுடைந்த நிலையில், மக்களுக்கு அச்சத்தை தரக்கூடிய அபாயகரமான நிலையில் இருப்பதால், மக்கள் நலன் கருதி, இக்கடைகளை அப்புறப்படுத்த, நாமக்கல் நகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.அதன் அடிப்படையில், இக்கடைகளை இடித்து அப்புறப்படுத்த, சேலம் நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் ஒப்புதல் அளித்துள்ளார். செலம்ப கவுண்டர் பூங்கா அமைந்துள்ள இடம் மற்றும் தினசரி சந்தை வளாகத்தை ஒட்டி கடைகள் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை சேர்த்து, 48 சென்ட் பரப்பளவில், நாமக்கல் நகராட்சி மூலம் ஒரு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பூங்காவில், சிறுவர் விளையாடுமிடம், இசையுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், பெரியவர்கள் நடை பயிற்சி செல்ல நடைபாதை ஆகிய வசதிகள் உருவாக்கப்படும். 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த பூங்கா, நாமக்கல் நகரில் உள்ள மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு அளிக்கும் இடமாக திகழும்.இப்பூங்கா, தமிழக அரசின் புதிய திட்டமான தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி