உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஐ.ஜே.கே., விருப்ப மனுவழங்க அறிவுறுத்தல்

ஐ.ஜே.கே., விருப்ப மனுவழங்க அறிவுறுத்தல்

ராசிபுரம்: 'ஐ.ஜே.கே., கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம்' என, அக்கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் முத்துராஜா, செயலாளர் சத்யமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக உள்ளாட்சி தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களிடம் விருப்ப மனு அளிக்கலாம்.நகராட்சி சேர்மன் பதவிக்கு, 1,000 ரூபாய், கவுன்சிலர் பதவிக்கு, 500 ரூபாய், டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு, 1,000 ரூபாய், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தலா, 500 ரூபாய் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து செப்டம்பர் 29ம் தேதிக்குள் கட்சி மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 97896 80871, 94421 44806 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ