டூவீலர் தென்னை மரத்தில்மோதி இளைஞர் பலிப.வேலுார்: திருச்செங்கோடு அருகே, நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், 28; கிரிக்கெட் பயிற்சியாளர். இவர், நேற்று முன்தினம் மாலை, தனது டூவீலரில் செல்லிபாளையம், சொக்கான்காடு ராஜா தோட்டம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு அருகில் இருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்மல்லசமுத்திரம், மார்ச் 29-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்தில், மொத்தம், 450 மூட்டைகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் கிலோ, 7,677 ரூபாய் முதல், 8,392 ரூபாய், கொட்டு பருத்தி, 4,805 ரூபாய் முதல், 5,627 ரூபாய் என, மொத்தம், 10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. அடுத்த ஏலம் ஏப்., 3ல் நடக்கிறது.பட்டுக்கூடு 427 கிலோரூ.1.60 லட்சத்துக்கு விற்பனைராசிபுரம்-ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 427.85 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ, 441 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 331 ரூபாய்க்கும், விற்பனையானது. 427.85 கிலோ பட்டுக்கூடு, 1.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ரூ.19 லட்சம் பறிமுதல்சேந்தமங்கலம்-தேர்தல் பறக்கு படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால், 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சத்திரம் அருகே, லக்கியம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் வங்கி ஏ.டி.எம்., மிஷின்களுக்கு பணம் நிரப்புவதற்காக சென்ற வாகனத்தை சோதனை செய்தனர். அதில், 19 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.