மேலும் செய்திகள்
திருவள்ளூர் எஸ்.பி., பொறுப்பேற்பு
18-Jul-2025
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தின், 31வது போலீஸ் எஸ்.பி., யாக விமலா நேற்று பொறுப்பேற்றார்.நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜேஸ்கண்ணன், சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு நுண்ணறிவு பிரிவிற்கு (எஸ்.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ.யு.,) இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சென்னை கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விமலா, நாமக்கல் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, எஸ்.பி., விமலா, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி, கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள விமலா, நாமக்கல் மாவட்டத்தின், 31வது எஸ்.பி., என்பது குறிப்பிடத்தக்கது.
18-Jul-2025