தேசிய கல்விக்கொள்கை பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ப.வேலுார்: ப.வேலுார் பா.ஜ., சார்பில், தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, 'சம கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, ப.வேலுார் காமராஜர் சிலை அருகே நேற்று நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கையெழுத்து இயக்க மாவட்ட பொறுப்பாளர் வடிவேல், சட்டசபை பொறுப்பாளர் தனலட்சுமி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் பத்மராஜா, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், கபிலர்மலை ஒன்றிய தலைவர் பூபதி, தெற்கு ஒன்றிய தலைவர் வரதராஜ், துணைத்தலைவர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.