உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமகிரி தாயார் கோவிலில் 22ல் நவராத்திரி விழா துவக்கம்

நாமக்கல் :நாமக்கல் கோட்டையில் பிரசித்திபெற்ற நாமிகிரி தாயார் உடனுறை நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நாமகிரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு நவராத்திரி விழா, வரும், 22ல் துவங்கி, அக்., 2 வரை, 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, 8:00 மணிக்கு, அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி உலாவும், காலை, 9:00 மணிக்கு, நாமகிரித்தாயார் கோட்டை திருவீதி உலாவும் நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, நரசிம்ம சுவாமி, ஒவ்வொரு அவதாரத்தில், நாமகிரித்தாயார் சன்னதியில் எழுந்தருளி, மகா தீபாராதனையும், கொலுமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும், மாலை, 6:00 மணிக்கு, லட்சுமிநாராயணர் சன்னதி முன் கலை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ராம சீனிவாசன், டாக்டர் மல்லிகா, ரமேஷ்பாபு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை