உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் ஒன்றியத்தில் 72 பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

நாமக்கல் ஒன்றியத்தில் 72 பள்ளிகளில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட, 72 அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை பள்ளிகளில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' நேற்று துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், 173 ஆண்கள், 846 பெண்கள் என, மொத்தம், 1,019 பேர் கற்போர்களாகவும், 72 பேர் தன்னார்வலர்களாகவும் செயல்பட உள்ளனர்.நாமக்கல் ஒன்றியம், பெரியூர் பஞ்., துவக்கப்பள்ளியில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' துவக்க விழா நடந்தது. வட்டார வள-மைய மேற்பார்வையாளர் சசிராணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் புஷ்பராஜ், சந்திரவதனா ஆகியோர் துவக்கி வைத்தனர். இத்திட்டத்தில், எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இல்-லாத கற்போர்களுக்கு, உயிர் மெய் எழுத்துக்கள், குறியீடுகள், 1,-100 வரை உள்ள எண்கள், கடிகாரம் பார்ப்பது, பசுமை தோட்டம், நாட்காட்டி, உடல்நலம் காப்போம், பணம் கூட்டல், கழித்தல், சாலை பாதுகாப்பு, முதலுதவி, அஞ்சலகத்தில் பணம் போடுதல், எடுத்தல், சாதனை பெண்கள், கிராம சபை, துாய்மை பாரதம் போன்ற தலைப்புகளில் கற்பிக்கப்படும்.பள்ளி தலைமையாசிரியர் சிந்தாமணி, பள்ளி மேலாண் குழு, பி.டி.ஏ., நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி