மேலும் செய்திகள்
டூவீலர் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி
10-Dec-2024
எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராஜ், 50. இவரது மனைவி பூங்கொடி, 47. மகன் சுரேந்திரன், 25. ஐந்து மாதத்துக்கு முன் வேட்டாம்பாடியை சேர்ந்த சினேகா, 22, என்ற பெண்ணுடன், சுரேந்திரனுக்கு திருமணம் நடந்தது. சில நாட்களாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த சினேகா, வேட்டாம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சுரேந்திரன், அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர்.நேற்று காலை வெகுநேரமாகியும், மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, மூவரும் துாக்கில் சடலமாக தொங்கினர். எருமப்பட்டி போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
10-Dec-2024