உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நோ பவர் கட்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நோ பவர் கட்

ராசிபுரம்: ராசிபுரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் பகுதியில் மின் தடையிருக்காது என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்-துள்ளனர். ராசிபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் தேவாங்கர் திரு-மண மண்டபத்தில், நாளை, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவாங்கர் திருமண மண்டப பகுதிகளில் மட்டும் மின் தடை இருக்காது என்றும், இப்பகுதியில் வழக்கம்போல்ல மின் வினியோம் இருக்கும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி