உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டிரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனைஎருமப்பட்டி, அக். 29-தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த பவித்திரம் ஆட்டுச்சந்தையில், 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. சந்தைக்கு எருமப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், கொல்லிமலை ஆடுகளை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். ஆடுகள் விற்பனை அதிகரித்ததால், விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு, 9,000 ரூபாய் முதல், 13,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை