உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நவராத்திரியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழி-பாடு

நவராத்திரியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழி-பாடு

குமாரபாளையம்: நவராத்திரி விழாவையொட்டி, குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.குமாரபாளையம், அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ