மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல்
14-May-2025
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., மேட்டு தெருவை சேர்ந்தவர் சத்தி-யராஜ், 45; இவர் கடந்த, 11ல் நடந்த மாரியம்மன் கோவில் தீர்த்-தக்குட ஊர்வலத்தில் நடனமாடி வந்துள்ளார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த எழில், 30, விஜயகுமார் ஆகியோர் நடனமாடி வந்துள்ளனர். அப்போது, இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரத்தில் இருந்த எழில், விஜய-குமார் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, கடையில் டீ குடித்-துக்கொண்டிருந்த சத்தியராஜை தாக்கியுள்ளனர். இதில், சத்தி-யராஜ் படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரை அங்கிருந்த-வர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார், தாக்குதல் நடத்திய எழில் என்பவரை கைது செய்ததுடன், விஜய-குமாரை தேடி வருகின்றனர்.
14-May-2025