மேலும் செய்திகள்
சிறுவன் மீது மோதிய கார் டிரைவர் தலைமறைவு
28-Aug-2025
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, விவசாயி ஒருவர், ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக தருவதாக கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி கல்லாங்காட்டுவலசு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 34, டூ - வீலர் மெக்கானிக். விவசாயமும் செய்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளில், 20,000க்கும் மேற்பட்ட பனை விதை விதைத்து, மரங்களை வளர்த்துள்ளார். தற்போது தமிழக அரசு ஆறு கோடி பனை விதை நடும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு பனை விதை நடுவதில் ஆர்வம் உள்ள நபர்களுக்கு, ஒரு லட்சம் பனை விதை இலவசமாக தருகிறேன் என விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். விதை தேவைப்படுவோர், 9524976864 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு இலவசமாக பெறலாம்.
28-Aug-2025