உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடு திருடியதாக தாக்கியதில் ஒருவர் பலி; 4 பேர் கைது

ஆடு திருடியதாக தாக்கியதில் ஒருவர் பலி; 4 பேர் கைது

பள்ளிப்பாளையம்: மோளகவுண்டம்பாளையம் பகுதியில் ஆடு திருட வந்ததாக வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில், பள்ளிப்பாளையம் போலீசார், 4 பேரை கைது செய்தனர்.பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் ஆடுகள் திருடு போய் வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் ஆடு திருடுவது யார்? என கண்காணித்து வந்தனர். கடந்த, ஐந்து நாட்களுக்கு முன், அங்கு வந்த இரண்டு பேரை, ஆடு திருட வந்தவர்கள் என நினைத்து, அப்பகுதியை சேர்ந்த சிலர், இருவரையும் சரமாரியாக தாக்கினர்.இதில், அவர்கள் படுகாயமடைந்தனர். பின், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி, நாகராஜன், பூபதி, குமரேசன் ஆகிய, 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ