உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு நடுநிலை பள்ளியில் ஆதார் மையம் திறப்பு

அரசு நடுநிலை பள்ளியில் ஆதார் மையம் திறப்பு

ராசிபுரம், : ராசிபுரம், அரசு நடுநிலைப் பள்ளியில் ஆதார் மையம் திறக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. எனவே மாணவ, மாணவிகள் எளிதாக ஆதார் எடுக்க வசதியாக அரசு பள்ளிகளிலேயே ஆதார் மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .நான்கு அல்லது ஐந்து பள்ளிகளுக்கு இடையே ஆதார் மையம் அமைத்து வருகின்றனர். ராசிபுரம் வி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், நேற்று ஆதார் மையம் தொடங்கப்பட்டது. நகராட்சி சேர்மன் கவிதா ஆதார் மையத்தை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் அருள்மணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டை 1 நெ., அரசு நடுநிலைப்பள்ளியில் ஆதார் மையம் தொடங்கப்பட்டது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஆதார் மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சுமதி, வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ