மேலும் செய்திகள்
நீர்மோர் பந்தல்எம்.பி., திறப்பு
01-Apr-2025
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.இதனால், நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், சேந்த-மங்கலத்தில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 'அட்மா' குழு தலைவர் அசோகன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் தனபால் வரவேற்றார்.இதில், எம்.பி., ராஜேஸ்குமார், தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தர். தொடர்ந்து, அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு, குடிநீர், மோர், தர்பூசணி பழம் வழங்கினர்.
01-Apr-2025