உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதுப்பாளையம் பஞ்., பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

புதுப்பாளையம் பஞ்., பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பள்ளிப்பாளையம், நவ. 1-புதுப்பாளையம் அக்ரஹாரம் பஞ்., பகுதியை, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் நகராட்சி எல்லையை விரிவுப்படுத்தி தரம் உயர்த்த, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியுடன், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., மற்றும் 5 பஞ்., பகுதிகள் இணைக்கப்படுகிறது. இதில் புதுப்பாளையம் அக்ரஹாரம் பஞ்., பகுதியும் அடங்கும்.எனவே, புதுப்பாளையம் அக்ரஹாரம் பஞ்., பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வசந்த நகர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதில், எங்களின் புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, கிராம ஊராட்சி ஊராட்சியாகவே தொடர வேண்டும் என்பதை ஒருமனதாக வலிறுத்துவதோடு, மக்களிடம் கருத்து கேட்டு பிறகு, கண்டிப்பாக ஊராட்சி மன்றம் மற்றும் கிராமசபையின் ஒப்புதலுடன் தான் நடைபெற வேண்டும்.எக்காரணத்தை கொண்டும் கிராமசபையின் ஒப்புதல் இல்லாமல் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை