சிறுவர் பூங்கா அமைக்க எதிர்ப்பு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., தெப்ப குளம் அருகே, 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில், டவுன் பஞ்., சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரு தரப்பினர், இந்த சிறுவர் பூங்கா அமைக்கும் இடம், தங்கள் சமூகத்தினரின் மயானமாக இருந்து வந்தது என்றும், அங்கு பூங்கா அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கலெக்டர் உமாவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.