| ADDED : ஜூன் 01, 2024 06:27 AM
நாமக்கல் : மோகனுார் ஒன்றியம், ஆரியூர் பஞ்.,க்குட்பட்ட ஆமப்பாறை பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 4.71 லட்சம் ரூபாய் மதிப்பில், சமத்துவ மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கபிலர்மலை ஒன்றிய அலுவலக பகுதியில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கபிலர்மலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரத்தை ஆய்வு செய்த கலெக்டர் உமா, அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார்.மேலும், ''குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில், சுவையாக உணவு சமைத்து வழங்க வேண்டும்,'' என, அங்கன்வாடி பணியாளருக்கு உத்தரவிட்டார்.