உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை

ஆவத்திபாளையத்தில் புறக்காவல் நிலையம் தேவை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியை சுற்றி களியனுார், கரட்டாங்காடு, சில்லாங்காடு, சமயசங்கிலி, கோட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்பும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக இப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் உலா வருகின்றனர். அங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தில், 'குடி'மகன்கள் குடித்து கும்மாளமிடுகின்றனர். பற்றாக்குறைக்கு, குடியிருப்பு பகுதியில் மது பாட்டில் விற்பனையும் ஜோராக நடக்கிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி