உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தெப்பக்குளம் நடைபாதையில் பேவர் பிளாக் பணி விறுவிறு

தெப்பக்குளம் நடைபாதையில் பேவர் பிளாக் பணி விறுவிறு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், 400 ஆண்டு பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் வழியில், டவுன் பஞ்.,க்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த தெப்பக்குளத்தை துார்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரில் இடிந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, தெப்பக்குளத்தை சுற்றி, எட்டு அடி அகலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பாதை அமைத்து, அதில் பேவர் பிளாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை, நேற்று டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபாலன் ஆய்வு செய்தார். தெப்பக்குளத்தில் உள்ள நடைபாதையின் நீளம், 600 அடி தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து தெப்பக்குளத்தின் பாதுகாப்பு கருதி, சுற்றிலும் கம்பி வேலியும் அமைக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ