உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

ப.வேலுார்: பரமத்தி அருகே, மாணிக்கநத்தம் கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி மற்றும் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துகளின் கழிவுநீரை, மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள காலாவதி கல்குவாரியில் தேக்கி, சுத்திகரிப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணிக்கநத்தம், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம், இருக்கூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், 2,000க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 10:00 மணிக்கு மாணிக்கநத்தம் கிராமம், பஞ்சபாளையம் பிரிவு சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணிக்கநத்தம் கிராமத்தில் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டால், இப்பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு தலைமையில், நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை, 4:00 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை