மாணவர்களுக்கு புகையிலை விற்க தடை விதிக்க கோரி மனு
நாமக்கல், நாமக்கல் மத்திய மாவட்ட, பா.ம.க., செயலாளர் ராஜாராம், கலெக்டர் துர்காமூர்த்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 'ஆன்லைன்' மூலம், 3 நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதேபோல், கஞ்சா மற்றும் தமிழகரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருள் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.மேலும், அரசு மதுபான பார் ஏலம் விடாமல், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியும், சந்துக்கடை அதிகளவு நடக்கிறது. ஒரு சில ரேஷன் கடைகளில் மதியத்திற்கு மேல் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.எனவே, மேற்படி லாட்டரி, கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்கவும்; அரசு மதுபான பார் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு சிகரெட், புகையிலை மற்றும் போதைப்பொருட்களை வழங்க வேண்டாம் என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.