உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்திற்கு கருத்து தெரிவிக்க அவகாசம் கோரி மனு

ராசிபுரம், ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தொடக்கத்தில் இருந்து, அ.தி.மு.க.,-கம்யூ.,-ம.தி.மு.க.,-தே.மு.தி.க.,-பா.ஜ., வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் என்ற பெயரில், கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டை மாற்றக்கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட கலெக்டரின் நேரடி விசாரணைக்கு பின், பொதுமக்கள் ஆட்சேபனை அல்லது கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று கந்தசாமி, ஜோதிபாசு ஆகியோர் நாமக்கல் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கருத்து அல்லது ஆட்சேபனை தெரிவிக்க, 28 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. 25ல் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு முகாமுக்கு சென்றுவிட்டதால் அன்றும் கருத்து தெரிவிக்க முடியவில்லை. எனவே, கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்ய, ஆக., 1 வரை அவகாசம் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை