உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளஸ் 2 பொதுத்தேர்வு: நாமக்கல் மாவட்டம் 95.67 சதவீதம் தேர்ச்சி பெற்று 15ம் இடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: நாமக்கல் மாவட்டம் 95.67 சதவீதம் தேர்ச்சி பெற்று 15ம் இடம்

நாமக்கல், பிளஸ் 2 பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 95.67 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 15ம் இடம் பிடித்துள்ளனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இது குறித்து கலெக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 195 பள்ளி களை சேர்ந்த, 8,813 மாணவர்கள், 9,116 மாணவியர் என மொத்தம், 17,929 பேர் தேர்வு எழுதினர். இதில், 8,312 மாணவர்கள், 8,840 மாணவியர் என மொத்தம், 17,152 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி, 94.32 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி 96.97 சதவீதம். மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம், 95.67. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில், நாமக்கல் மாவட்டம், இந்த ஆண்டு மாநில அளவில், 15ம் இடம் பெற்றுள்ளது. 70 பள்ளிகள், நுாற்றுக்கு நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 12 அரசு பள்ளிகள், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு கூறினார்.கடந்தாண்டு நாமக்கல் மாவட்டம், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 96.10 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடம் பெற்றிருந்தது. தற்போது அதைவிட, 0.43 சதவீதம் குறைவாக பெற்று, 15ம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை